புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Monday, 13 February 2012

Its now available in India, be careful


Its now available in India, be
careful 




PLEASE BE  CAREFUL WHENEVER YOU'RE
USING A public computer (Like INTERNET CAFES.
ETC )

CHECK THE BACK OF THE PC AND SEE IF THE BELOW
DEVICE IS THERE....   IF SO..then DO NOT USE IT!!! 


New storing  device fits at the end of the keyboard cable connecting to
  the   PC  specialized to save all typed keys in it? 

Mostly could be used in net cafes,  exhibitions, hotels and airports
therefore be  careful especially the people who use the internet in these 

places to  enter their bank accounts online or any other important sites.




After you enter  the bank account and leave the PC it will be easy to 

open  your account  again as all what you have typed has been saved
in 

the Black device. 



Therefore,  you should check the PC for any suspicious piece behind it 


before using  the net in public places for important sites. 



Please send it to all  who you know to educate them against this fraud. 

Monday, 16 January 2012

விண்டோஸ் 7 வேகமாக இயங்க


                                             
                                         

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிக வேகமாக பயனாளர்களின் விருப்பத் தேர்வாக மாறி, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிஸ்டத்தில், சில டிப்ஸ்களை மேற் கொண்டு, அதன் இயக்கத்தை விரைவு படுத்தலாம். நம் கம்ப்யூட்டர் செயல்பாடு களை வேகமாக மேற்கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. விரைவாக அப்ளிகேஷனை இயக்க: கீ போர்டில் விரல்களை இயக்கியவாறே, அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க வேண்டுமா? முன்பு இவற்றை இயக்க, மவுஸ் கொண்டு, முகப்பு திரையில் ஐகான் இருந்தால், அதன் மீது கிளிக் செய்திட வேண்டியதிருக்கும். அல்லது விண்டோஸ் லோகோ கீ அழுத்தி, கிடைக்கும் பட்டி யலில், ஆல் புரோகிராம்ஸ் (All Programs) தேர்ந்தெடுத்து, அதில் அப்ளிகேஷன் புரோகிராமின் இடம் தேடி கிளிக் செய்திட வேண்டியதிருக்கும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இப்படி எல்லாம் அலைய வேண்டியதில்லை. விண்டோஸ் கீ அழுத்தி, கிடைக்கும் கட்டத்தில், அப்ளிகேஷன் பெயரைச் சுருக்கமாக டைப் செய்து, (எ.கா: Google Chrome இயக்க ‘chr’, iTunes இயக்க ‘it’) என்டர் தட்டினால் போதும். அல்லது டாஸ்க் பாரில் இந்த அப்ளிகேஷன்களை வைத்திருந்தால், விண்டோஸ் கீயுடன், டாஸ்க் பாரில் அந்த அப்ளிகேஷன் இடம் பெற்றுள்ள இடத்தின் எண்ணை இணைத்து அழுத்தினால் போதும். எடுத்துக்காட்டாக, குரோம் பிரவுசர் இரண்டாவது இடத்தில் இருந்தால், விண்டோஸ்+2 அழுத்தினால் குரோம் பிரவுசர் இயங்கத் தொடங்கும்.

2. ஆட்டோ பிளே கட்டுப்படுத்துதல்: ஒரு சிடி அல்லது டிவிடி திரைப்பட சிடியைப் போட்டவுடன், அது இயங்கத் தொடங்கு கிறது. அது ஏன்? என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? விண்டோஸ் ஆட்டோ பிளே (Windows Auto Play) என்ற செயல்பாடு இதனை இயக்குகிறது. இந்த இயக்கம் எந்த சிடிக்கும் பொருந்தும். அது பைல்கள் அல்லது புரோகிராம்கள் இருப்பதாக இருந்தாலும் இதே போலச் செயல்படும். இதனை நம் விருப்பப்படியும் மாற்றி அமைக்கலாம். இதற்கு முதலில் Control Panel> AutoPlay எனச் செல்லவும். இங்கு சிடி, டிவிடி, கேமரா, ஸ்மார்ட் போன் என எந்த சாதனத்தை இணைத்தாலும் அதனை எப்படி இயக்க வேண்டும், இணைத்தவுடனா அல்லது நாம் விரும்பும் போதா என செட் செய்திடலாம்.

3. தானாக இடம் மாறும் விண்டோ: மாறா நிலையில், விண்டோஸ் 7 சிஸ்டம், திறக்கப் பட்டிருக்கும் விண்டோ ஒன்றை நீங்கள் ஓர் ஓரத்திற்கு இழுத்துச் சென்றால், விண்டோ வினைச் சுருக்கி ஓரத்தில் அமைக்கும்; மேலாக இழுத்தால், திரை முழுமையும் கிடைக்கும். வேறு வகையில் திரையில் பாதியாக அமைக்கும். பல விண்டோக் களை ஒரே நேரத்தில் திரையில் பார்த்த வாறே இயக்க எண்ணுபவர்களுக்கு இந்த செயல்பாடு உதவக் கூடியதாகவே உள்ளது. ஆனாலும், பலருக்கு இது எரிச்சலைத் தரும். இந்தச் செயல்பாட்டினை நிறுத்த எண்ணுவார்கள். இதனை நிறுத்த, Control Panel, Ease of Access Center சென்று, Make the mouse easier to use என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், Prevent windows from being automatically arranged when moved to the edge of the screen என்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.

4. தவறினைச் சரி செய்திட வேறு ஒரு பயனாளராக: விண்டோஸ் இயக்கம் அல்லது தினந்தோறும் நீங்கள் பயன் படுத்தும் ஒரு அப்ளிகேஷன் இயங்குவதில் பிரச்னைகளை எதிர்கொள்கிறீர்களா? விண்டோஸ் 7 இயக்கத்தில் இதனைப் புதிய ஒரு வழியில் சரி செய்திடலாம். வழக்கமான உங்கள் யூசர் அக்கவுண்ட் விடுத்து, தனியாக ஒரு யூசர் அக்கவுண்ட் திறந்து, அந்த பயனாளராக இந்த அப்ளிகேஷன்களை இயக்கிப் பார்க்கவும். இந்த வழியில் மீண்டும் பிரச்னைகள் வருகின்றனவா எனக் கண்காணிக்கவும். இந்த அக்கவுண்ட்டில் பிரச்னைகள் இல்லை என்றால், பிரச்னைகள் சிஸ்டத்தைப் பாதிக்கும் வகையில் இல்லை என்று பொருளாகிறது. அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததில், அல்லது செட்டிங்ஸ் அமைப்பதில் ஏதேனும் சிறிய அளவில் தவறு நேர்ந்திருக்கலாம். இரண்டு அக்கவுண்ட்களிலும் பிரச்னைகள் ஏற்பட்டால், அப்ளிகேஷன் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.

5. விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைலின் துணைப் பெயர்: பைல்களின் துணைப் பெயர், நீங்கள் எத்தகைய பைலைத் தேடுகிறீர்கள் அல்லது தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைக் காட்டும். .doc என்பது வேர்ட் பைலின் துணைப் பெயர். ஒரு டிஜிட்டல் போட்டோ .jpg என்ற துணைப் பெயரினைக் கொண்டுள்ளது. இப்போது வரும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்களின் துணைப் பெயரை மறைத்துக் காட்டுகிறது. ஆனால், இந்த பெயர் காட்டப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால், விண்டோஸ் எக்ஸ்பு ளோரரை இயக்குங்கள். பின்னர் Organize, Folder and search options எனச் செல்லுங்கள். இங்கு View டேப் தேர்ந்தெடுக்கவும். இதில் Hide extensions for known file types என்பதற்கு முன்னால் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

6. லேப்டாப் ட்ராக்பேட் இயக்க நிறுத்தம்: லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள், தொடக்கத்தில் கீ போர்டில் டைப் செய்கையில் மிகவும் சிரமப்படுவார்கள். அவர்கள் விரல்கள் ட்ரேக் பேடைத் தொட்டு விட்டால், உடன் கர்சர் எங்காவது சென்று நிற்கும். டைப் செய்வது எல்லாம் வேண்டாத இடத்தில் டைப் ஆகும். ட்ரேக் பேடில் விரல் அல்லது உள்ளங்கைப் பாகம் படாமல் டைப் செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கும். இந்த சிரமத்தை TouchpadPal 1.2 என்ற புரோகிராம் நீக்குகிறது. இதனை http://tpp.desofto.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து கொண்டால், பிரச்னை தீரும். இது தானாகவே இயங்கி, நீங்கள் கீ போர்டில் டைப் செய்கையில், ட்ரேக் பேடின் செயலாக்கத்தினை நிறுத்திவிடும்.

ஒரே இணைய தளத்தில் உலகப் பத்திரிகைகள்


                                                         


  உலகின் 82 நாடுகளில் வெளியாகும் 877 பத்திரிக்கைகளை ஒரே இணைய தளத்தில் பெறலாம். இந்த வாய்ப்பினை http://www.newseum. org/todaysfrontpages/flash/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் தருகிறது. தளத்தின் செயலுக்கு ஏற்ற வகை யில் இதற்கு நியூசியம் (newseum) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த தளத்தில் நுழைந்தவுடன் அமெரிக்க கண்டத்தின் மேப் காட்டப்பட்டு எந்த நகரங்களிலிருந்து வெளியாகும் தினசரி நாளிதழ்கள் காட்டப்படுகின்றனவோ, அவற்றை அடையாளம் காட்டும் வகையில் புள்ளிகள் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. மற்ற நாடுகளுக்கு மேலாக அந்த கண்டங்களின் பெயர்களோடு டேப்கள் கிடைக்கின்றன. எனவே நாம் விரும்பும் நாட்டில், நகரம் மேப்பில் உள்ள இடத்தில், மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால், என்ன செய்தித்தாள் என முன் பக்கத் தோற்றம் காட்டப்படுகிறது. அந்த செய்தித் தாளின் செய்திகளைப் படிக்க அதனைக் கிளிக் செய்து அதன் மின் பதிப்பைப் பெறலாம். தொடர்ந்து கிளிக் செய்தால், செய்தித்தாள் முழுவதும் படிக்கக் கிடைக்கும்.

ஆங்கிலம் மட்டுமின்றி பிற மொழிகளில் வெளியாகும் செய்தித்தாட்களும் கிடைக்கின்றன. ஒவ்வொரு நாளும் அந்த அந்த நாளுக்குரிய செய்தித்தாள் கிடைக்கிறது. செய்தித்தாள் நிறுவனம் தன் பக்கங்களை மாற்றுகையில், இங்கும் அப்டேட் செய்யப்படுகிறது. எனவே பன்னாட்டு செய்திகளை ஒரே இணையதளம் மூலம் கிடைக்கும் வாய்ப்பு பெறுகிறோம்.
எந்தவிதத் தணிக்கையும் இன்றி காட்டப்படுவதால், சில வேளைகளில் நாட்டுக்கு நாடு பிரச்னைக்குரிய தடை செய்யப்பட்ட செய்திகளும் இங்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது

ஐ.பி.- சில தகவல்கள்


            கம்ப்யூட்டர், குறிப்பாக இன்டர்நெட் பயன்பாட்டில், ஐ.பி.(IP) மிக முக்கிய தொடராகும். கம்ப்யூட்டர் உலகிற்கு வெளியே IP என்பது ஒருவரின் (Intellectual Property) சிந்தனைச் சொத்தினைக் குறிக்கும். கம்ப்யூட்டர் உலகில் இது “Internet Protocol” என்பதன் விரிவாக்கமாகும். இதனை “TCP - Transmission Control Protocol.” சேர்த்துக் கூறப்படுவதனை நீங்கள் பார்த்திருக்கலாம். டிசிபி/ஐ.பி. என்பது இரண்டு கம்ப்யூட்டர்கள் ஒன்றுக்கொன்று தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு தொழில் நுட்ப வசதியைக் குறிக்கிறது.

இணைய இணைப்பில், ஒவ்வொரு கம்ப்யூட்டரும் சர்வரும் (email servers, IP hosts) ஒரு ஐ.பி. முகவரியைக் கொண்டுள்ளன. சிலநிறுவனங்கள் அனுப்பும் கடிதங்கள் கொண்ட கவர்களில் இந்த கடிதம் முகவரிக்கு அனுப்பப்பட முடியவில்லை என்றால் திருப்பி இந்த முகவரிக்கு அனுப்புக என்று ஒரு முகவரி தரப்பட்டிருக்கும். இன்டர்நெட் தகவல் பரிமாற்றத்தில் ஒரு ஐ.பி. முகவரி ஏறத்தாழ இந்தப் பணியினை மேற்கொள்கிறது.
ஐ.பி. முகவரி நான்கு எண் தொடர்களைக் கொண்டதாக அமைகிறது. எடுத்துக்காட்டாக 69.44.18.176 என்பது ஒரு ஐ.பி. முகவரி. டேட்டா அனுப்பப்படுகையில் இந்த முகவரி ஒரு போஸ்டல் ஸ்டாம்ப் போல இணைத்து அனுப்பப்படுகிறது. இதிலிருந்து ஒருவர் இந்த டேட்டா எந்த நாட்டிலிருந்து, எந்த இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் வழியாக, எந்த கம்ப்யூட்டருக்கு அனுப்பப்பட்டது என அறிந்து கொள்ளலாம்.
சில ரௌட்டர்களும் சாப்ட்வேர் தொகுப்புகளும் இந்த ஐ.பி.முகவரியை மறைத்து அனுப்பும் வேலையையும் செய்கின்றன. அப்படி மறைத்து அனுப்பப்படும் மெயில்களில் மறைத்து வைக்கப்பட்ட எண்ணைக் கண்டறியும் சாப்ட்வேர்களும் உள்ளன. ஒரு சிலர் இந்த ஐ.பி. முகவரி உள்ள கம்ப்யூட்டரைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு, தங்கள் கடிதங்களை அந்த கம்ப்யூட்டரிலிருந்து அனுப்பும் வகையிலும் அனுப்புவார்கள்.

இன்டர்நெட் இணைப்பில் நிலையாக ஒரு சர்வரைக் கொண்டு அல்லது சர்வர் போல் இயக்கப்படும் கம்ப்யூட்டருக்குத்தான் நிலையான ஐ.பி. முகவரி தரப்படும். மற்றபடி நாம் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடரின் கம்ப்யூட்டரின் வழியாக அனுப்புகையில் அவ்வப்போது ஒரு ஐ.பி. முகவரி கிடைக்கும்.
இருப்பினும் நாம் நம் ஐ.பி. முகவரி திருடு போகாமல் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சென்ற ஆண்ட்டில் மட்டும் இது போன்று திருட்டு நடவடிக்கைகள் 450% உயர்ந்துள்ளதாக ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு தயாரிக்கும் நிறுவனமான சைமாண்டெக் கூறியுள்ளது. இவ்வாறு ஹேக்கர்களின் கட்டுப்பாட்டிற்குள் வரும் கம்ப்யூட்டர்களை Bot என அழைக்கின்றனர். சில ஹேக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்த கம்ப்யூட்டர்கள் அனைத்தையும் ஒரு நெட்வொர்க்கில் கொண்டு வந்து இயக்கவும் செய்கின்றனர்.

இவ்வாறு நம் ஐ.பி. முகவரி திருடு போகாமால் இருக்க என்ன செய்ய வேண்டும்? நம் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் மற்றும் பயர்வால்களைத் தொடந்து அப்டேட் செய்ய வேண்டும்.

Saturday, 14 January 2012

அனைவருக்கும், இனிய பொங்கல் தின,உழவர் தின,திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்...




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner